கண்காணிப்பு வளையத்துக்குள் பேஸ்புக் பக்கங்கள்!

பொதுத்தேர்தல் பிரசாங்களின்போது பேஸ்புக் பக்கங்கள் கண்காணிக்கப்படவுள்ளதாக பெப்ரல் என்ற சுதந்திர தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கட்சிகளின் பேஸ்புக் பக்கங்கள் என்பன கண்காணிக்கப்படவுள்ளதாக பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின்போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 11ஆயிரம் பேஸ்புக் பக்கங்கள் கண்காணிக்கப்பட்டன. பொதுத்தேர்தலில் 4000 வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுவதால் இணைய பிரசாரங்கள் முன்னிலைப்பெறும். எனவே அவற்றை கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!