பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா தொற்று: ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்மணி!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 13ஆவது நபர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது. 80 வயதான குறித்த பெண்னே வன்கூவர் பொது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி, தெரிவித்துள்ளது. குறித்த பெண், சமீபத்தில் இந்தியா மற்றும் ஹொங்கொங்கில் பயணம் செய்து திரும்பியதாகவும், அவர் எங்கு கோவிட் -19 வைரஸ்க்கு பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி கூறுகையில், ‘குறித்த பெண்னுக்கு அறிகுறி தோன்றிய நேரம் ஹொங்கொங்கோடு தொடர்புடையதாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அந்த பெண் இந்தியாவில் பயணம் செய்த ஒரு சுற்றுப்பயணக் குழுவையும் மாகாணம் கவனித்து வருகின்றது.

நோயாளி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் தனிமையில் உள்ளார், ஊழியர்கள் மற்றும் பிற நோயாளிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது’ என கூறினார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் கடுமையான நோயாளி இவராவார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!