மனைவியுடன் சுற்றுலா சென்ற கனடியருக்கு நேர்ந்த சோகம்!

கனடாவை சேர்ந்த நபர் தனது மனைவியுடன் விடுமுறைக்கு சுற்றுலா வந்த இடத்தில் உள்ளூர் இளைஞர்கள் அவரை சுட்டதால் பக்கவாதம் ஏற்பட்டு முடமாகி போயுள்ளார். கனடியரான Kenneth Elliott தனது மனைவியுடன் கடந்த மாதம் 22ஆம் திகதி Barbados நாட்டுக்கு வந்திருக்கிறார். Kenneth-ன் நண்பர் Robert Elliottம் தனது மனைவியுடன் வந்திருந்தார். நான்கு பேரும் அங்குள்ள சுற்றுலாவாசிகள் தங்குமிடத்தில் தங்கினார்கள். அந்த சமயத்தில் Travis Orin Campbell மற்றும் Alexandra Alleyne ஆகிய இரண்டு இளைஞர்கள் Kenneth தங்கியிருந்த இடத்துக்கு வந்தனர்.

பின்னர் அவரை நோக்கி இருவரும் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு அவரின் தோள் பகுதியில் பாய்ந்தது. வலியால் துடித்த Kennethக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு முடமாகி போயுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் Travis மற்றும் Alexandra ஆகிய இருவரையும் பொலிசார் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் ஏப்ரல் 6ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!