முக்கிய நிகழ்வில் ஹரி-மேகன் தம்பதிக்கு காத்திருந்த அவமானம்!

ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறும் முன் கடைசியாக பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இளவரசர் ஹரிக்கும் அவரது மனைவி மேகனுக்கும் ஒரு அவமானம் காத்திருக்க, சரியான நேரத்தில் கைகொடுக்க முன்வந்துள்ளனர் வில்லியம் கேட் தம்பதியர். Westminster Abbeyயில் மகாராணியாரின் காமன்வெல்த் ஆராதனையில் பங்கேற்க ஹரியும் மேகனும் வந்திருந்தனர். ஹரி குடும்பம் வட அமெரிக்காவில் தங்கள் புது வாழ்வை துவக்க முடிவு செய்துள்ளதால், அவர்கள் கடைசியாக பங்கேற்கும் ராஜ குடும்ப நிகழ்வு இதுவாகும். ஆகவே, இது ஹரி மேகனுக்கு பிரியாவிடை அளிக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மகாராணியாருடன் ஹரியும் மேகனும் கடைசியாக ஒரு முறை வர அனுமதிக்கப்படுவர் என கருதப்பட்டது.

ஆனால், அவர்கள் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் என்ற பொறுப்பை உதறியதால், VIPகளாக, மகாராணியாருடன் வர அனுமதிக்க முடியாது என்ற சட்டம் குறுக்கிட்டது. ஆகவே, அவர்கள் இருவரும் மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்களைப்போல், தாங்களாகவே வந்து மகாராணியார் வருவதற்கு முன்பாகவே தங்கள் இருக்கைகளில் அமர்ந்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தைக் கேட்ட ஹரி மேகன் தம்பதி, மிகவும் அப்செட் ஆகியிருக்கிறார்கள். இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும், மீண்டும் பொதுமக்கள் முன்னால் ஒரு நாடகம் அரங்கேறவேண்டிய ஒரு சூழல் ஏற்படலாம் என்பதால், பதற்றத்தை குறைப்பதற்காக இளவரசர் வில்லியமும் அவர் மனைவி கேட்டும் ஒரு ஆலோசனை கூறியுள்ளனர்.

தம்பி மற்றும் அவரது மனைவி அவமதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, வில்லியம், தானும் தன் மனைவியும் கூட, ஹரி மேகனைப்போலவே, மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களுடன் VIPகளாக வராமல், மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்களுடன் முன்கூட்டியே வந்து ஹரி மேகனுடன் அமர்ந்துகொள்வது என முடிவு செய்துள்ளார்கள். ஆனால், சட்ட திட்டங்கள் அதற்கு அனுமதிக்காது என அவர்களுக்கு திட்டமும் தெளிவுமாக கூறப்பட்டுவிட்டதையடுத்து, அவர்களால் ஹரி, மேகனுக்கு உதவ முடியாமல் போய்விட்டது. கடைசியாக ஒரு முறை குடும்பத்தினருக்கிடையே உள்ள பிளவை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!