விபத்தில் இளைஞன் பலி! – ‘ஏப்ரல் பூல்’ என நம்ப மறுத்த குடும்பத்தினர்

மட்டக்களப்பு- ஏறாவூர் சவுக்கடியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த பனை மரமொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மட்டக்களப்பு, வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ். சுரேஸ்காந் (22) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாகரையில் உள்ள உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தாருக்கு சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தொலைபேசி மூலம் பலியான விடயத்தைக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் இன்று ஏப்ரல் ஃபூல் (உலக முட்டாள்கள் தினம்) எங்களுக்குத் தெரியும் போனை வையுங்கள் என்று அழைப்பை துண்டித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!