2000 கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும், 2000 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் வாரங்களில் ஏற்படப் போகும் நிலைமையை கருத்திற் கொண்டு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நோய் பரவலை கணக்கிட்டு இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இலங்கையில் காணப்பட்ட நிலைமைக்கமைய ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையில் நோயாளிகளின் எண்ணிக்கை 165 ஆக அதிகரிக்கும் என்றும், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை 340ஐ பதிவு செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!