ஊரடங்கில் ஒன்று கூடுவோரை பிடிக்க புலனாய்வுப் பிரிவு களமிறக்கம்!

ஊரடங்கு உத்தரவை மீறி, கொழும்பில் சன நெரிசல் மிக்க பகுதிகளில் இரவு வேளைகளில் சுற்றித் திரிபவர்கள், ஒன்று கூடுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை புலனாய்வு பிரிவினர் நேற்று ஆரம்பித்துள்ளனர் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை கவனத்தில் எடுக்காத சிலர், இரவு நேரங்களில் தொடர்மாடி மனைகளில் ஒன்று கூடுவதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவை மதித்து வீடுகளுக்குள்ளே இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!