சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் எரிபொருள்விலை அதிகரிக்கும் – கனிய வள அமைச்சு தெரிவிப்பு

கனிய எண்ணெய் கூட்டுத்தா பனத்தின் எரிபொருள் விலைகள் நிச்சயம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அது எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இடம்பெறும் என்றும் கனியவள அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் விற்பனையில் கூட்டுத் தாபனத்திற்கு நாளொன்றுக்கு 38 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதற்கு சமாந்தரமாக, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் விலையை நிர்ணயம் செய்வதற்கான விலைச் சூத்திரத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறிருப்பினும், இந்த விலை சூத்திரம் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!