கொரோனா எதிரொலி! கொழும்பில் 20 ஆண்டுகளுக்கு பின் குறைவடைந்த வளி மாசடைதல் வீதம்

கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

20 வருடங்களுக்கு பின்னரே இவ்வாறு வளி மாசடையும் வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவர் கூறுகையில்

ஊரடங்குச் சட்டம் காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், வளிமண்டலத்தில் தூசி துகளின் அளவு குறைவடைவதைக் காட்டுவதுடன், காற்று மாசுறும் வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்த வகையில், தற்போது காற்றுமாசு அளவின்படி அதன் எண்ணிக்கை 30 மற்றும் 20 புள்ளிகளுக்கு இடையில் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!