தாக்குதல்களை தடுத்தத் தவறியவர்கள் மீது நடவடிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட குண்டுதாரிகளுக்கு நிதியுதவி மற்றும் விநியோக உதவிகளை செய்வதவர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறுவதால், அது பற்றி கருத்துக் கூற முடியாது எனவும் கோவிட்-19 பரவல் காரணமாக ஈஸ்டர் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்கல் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். எனினும் தாக்குதல் பற்றி தெரிந்தும் அது பற்றி மக்களுக்கு எச்சரிக்க தவறியவர்கள் முதலில் சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!