கோட்டாபயவின் சிறப்பு திட்டம்! மக்களின் வீடுகளுக்குச் செல்லும் அதிகாரிகள்

நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் ‘சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்’ அமைக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வழிகாட்டலில் வீட்டுத் தோட்டம் செய்யும் பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவில் வீட்டுத் தோட்டம் செய்யும் பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் கன்றுகள் வீடு வீடாக சென்று வழங்கப்படுவதுடன், தோட்டத்தினை ஊக்குவிக்கும் வழிமுறைகளும் நடைபெற்று வருகின்றது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.அஸ்பர், ரி.மோனகரூபன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.றியாஸ் ஆகியோர் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.

இதில் கத்தரி விதைகள் ஐம்பது பேருக்கும், சட்டியில் வளர்க்கப்பட்ட கத்தரி கன்றுகள் நூறு பேருக்கும், சௌபாக்கியா திட்டத்தின் ஐந்து விதைகள் அடங்கிய பைகள் நூற்றி ஐம்பது பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!