5000 ரூபா கொடுப்பனவு இன்றுடன் நிறுத்தம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும், திட்டம், இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாலின் போதே. இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுவரை 416,764 மூத்த பிரஜைகள் உள்ளிட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கும், விசேட தேவையுடைய 84,071 பேருக்கும், நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளாக உள்ள 25,230 பேருக்கும் , மொத்தம் 7 பில்லியன் ரூபா நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது எனவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!