சடலங்களை பொதியிடும் பைகளை கோரிய கடிதம் கசிந்தது எப்படி? – சிஐடி விசாரணை

சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான 1000 பைகளை வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு சுகாதார அமைச்சு அனுப்பிய கடிதம் எவ்வாறு ஊடகங்களுக்கு கசிந்தது என்று சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உடல்களை அப்புறப்படுத்த சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து 1000 பைகளை கோரியது. ஐ.சி.ஆர்.சி யிடமிருந்து 1000 பைகள் கோரி சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் மருத்துவர் சுனில் டி அல்விஸ் கையெழுத்திட்ட கடிதம் இந்த வாரம் சமூக ஊடகங்களில் கசிந்தது.

இந்த கடிதத்தின் மூலம் கொரோனா வைரஸிலிருந்து இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழலாம் என்ற வகையில் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

மருத்துவ சேவைகள் பிரிவில் இருந்து கடிதம் கசியவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக டாக்டர் சுனில் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

கடிதம் தனிப்பட்ட மற்றும் இரகசியமானது என்றும், எனவே இது குறித்து விசாரிக்க சிஐடியிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!