கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் சடலம் தகனம்! – குடும்பத்தினர் கொதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று உயிரிழந்த மோதரையைச் சேர்ந்த பாத்திமா றினோஸா என்ற பெண்ணின், சடலத்தைப் பார்வையிடுவதற்கும், ஜனாஸா தொழுகையில் பங்கேற்பதற்கும் அவரது கணவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை என உயிரிழந்தவரின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.

“கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்த எனது தாயாரின் சடலத்தை எரியூட்டுவதற்காக என்னிடம் கையொப்பம் கேட்டார்கள். நான் மறுத்தேன். அதில் பிடிவாதமாக இருந்தேன். எனினும், அவர்கள் பலாத்காரமாக என்னிடம் கையொப்பத்தைப் பெற்றார்கள். எனது தாயாருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினோம்.

எனினும், எனது தாயாரின் சடலத“தை பார்வையிடவோ அல்லது அவருக்காகத் தொழுகை நடத்தவோ எனது தந்தையை அனுமதிக்கவில்லை. பலாத்காரமாக எங்கள் குடும்பத்தை அநுராதபுரத்திற்கு ஏற்றி அனுப்பி விட்டார்கள்.

இது பெரும் அநீதியானது. நாங்கள் கவலையடைந்துள்ளோம். ஏமாற்றமடைந்துள்ளோம். மனைவியின் முகத்தை கணவருக்குக் காட்டாததும், ஜனாஸா தொழுகையில் கணவரை அனுமதிக்காததும் நியாயமா? என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!