கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியது!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் பரவி சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 242-க்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 350 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!