மகிந்தவுடன் அமெரிக்கத் தூதுவர் அரசியல் பேசவில்லை – என்கிறார் பீரிஸ்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்சவை கூட்டு எதிரணியின் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று மகிந்த ராஜபக்சவிடம், அமெரிக்கத் தூதுவர் கூறியதாக வெளியான தகவல்கள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“மரியாதை நிமித்தமாகவே, மகிந்த ராஜபக்சவை அமெரிக்கத் தூதுவர் சந்தித்திருந்தார். இதன் போது அரசியல் விடயங்கள் பற்றி எதுவும் பேசப்படவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!