மோடி முகத்தில் கரி பூசிய மகிந்த: இந்திய சீன கோஷ்டியில் நாங்கள் இல்லை என்கிறார்

இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. காரணம் என்னவென்று உங்களுக்கே தெரியும். அம்மையார் மிராஜ் விமானங்களை அனுப்பி யாழ்ப்பாணத்தில் உணவு பொட்டலங்கை போட்டு, ஒரு காட்டு காட்டி இலங்கையை கிலி கொள்ள வைத்தார்.

ஆனால் இன்று சோனியா காந்தி தொடக்கம், மோடி வரை தொலைபேசியில் அழைத்து மகிந்த சகோதரர்களிடம் காலைப் பிடித்து கெஞ்சவேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இது தான் இன்றைய யதார்த்த நிலையாக உள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு வலுச் சேர்க்கும் வகையில், மோடி ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசி ஆதரவு தரும்படி கேட்டிருந்தார். ஆம் என்று கூறி தொலைபேசியை துண்டித்தார் கோட்டபாய. ஆனால் அதன் பின்னால் நேற்றைய தினம்(28) எங்கள் கொள்கை அணி சேரா கொள்கை எங்களுக்கு இரண்டு நாடுகளும் நண்பர்கள் என்று இலங்கை கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

என்னதான் தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்தியா உதவி இருந்த போதும் சீனாவுக்கே மகிந்த ராஜபக்சே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது தற்போது மிகத் தெளிவாக புரிகிறது. இனியும் இந்தியா நம்பினால் அதனை போன்ற ஒரு முட்டாள் வேறு யாராகவும் இருக்க முடியாது. இந்திய சீனாவுக்கு இடயே முறுகல் நிலை தோன்றினால், இலங்கை நிச்சயம் சீனா பின்னால் நிற்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பட்டும் இல்லை. எனவே இந்தியா இனி ஜாக்கிரதையாக இருப்பது நல்லது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!