இராஜதந்திரிகளுக்கு பிசிஆர் சோதனையில் இருந்து விலக்குரிமை கிடையாது!

anilவெளிநாடுகளில் இருந்து வரும் எவரும் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் பிசிஆர் பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்​ இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பிசிஆர் பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார். இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்தே வெளிநாடுகளில் இருந்து வரும் எவரும் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையை நிராகரிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தால் அவர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான தொற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் டாக்டர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!