நேற்று 48 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 48 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 42 கடற்படையை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 03 பேரும், பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய நபர் டுபாயில் இருந்து நாடு திரும்பியவர் என்றும், இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவரகள் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1797 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைப் பெற்று வருகின்றவர்களின் எண்ணிக்கை 947 ஆக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!