முன்னாள் காவல்துறை மா அதிபர் கைது செய்யப்படுவார்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளார்.

இந்தப் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டால், முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவார் என்று, அரச சட்டவாளர் ஜனக பண்டார நேற்று முன்தினம் கல்கிசை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“அந்த நேரத்தில் அவருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாததால், ஜயந்த விக்கிரமரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், ஜயந்த விக்கிரமரத்னவுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் திரட்டினால், அவரது கைது தவிர்க்க முடியாததாக இருக்கும்” என்றும் அரசதரப்பு சட்டவாளர் ஜனக பண்டார தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!