கிழக்கு செயலணி இனப்பரம்பலை பிரதிபலிக்காதது ஏன்?

இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு (கிழக்கு) என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி இனப்பரம்பலை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் தன்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர், குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி இனப்பரம்பலை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தூதுவர், இலங்கை நீண்ட ஜனநாயக வரலாற்றை கொண்டது என்றும் இலங்கை தனது ஜனநாயக கட்டமைப்பினை பலப்படுத்துவது மற்றும் ஆழமாக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!