உக்ரைனிலிருந்து கனடா வந்த பயணிகள் விமானத்தில் இறந்த நிலையில் கிடந்த நாய்க்குட்டிகள்!

உக்ரைனிலிருந்து கனடா வந்த பயணிகள் விமானம் ஒன்றில் 500 நாய்க்குட்டிகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், கனடா விமான நிலையம் வந்தபோது அவற்றில் 38 நாய்க்குட்டிகள் இறந்துபோயிருந்த சம்பவம் விலங்குகள் விரும்பிகளை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது. உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் Kiev நகரிலிருந்து சுமார் 500 பிரெஞ்சு புல்டாக் வகை நாய்க்குட்டிகள் கனடாவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

விமானம் ரொரன்றோவின் Pearson சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது அவற்றில் 38 நாய்க்குட்டிகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் கனேடிய உணவு பரிசோதனை ஏஜன்சியான CFIA,அந்த நாய்க்குட்டிகளில் பல நீர்சத்துக் குறைபாடு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

விலங்குகள் நல ஆர்வலர்கள், உலகம் முழுவதிலும் உள்ள நாய்ப்பிரியர்களின் தேவைகளை பயன்படுத்தி உக்ரைனின் பெருகிவரும் நாய்ப்பண்ணை தொடர்பான உண்மையை இந்த சம்பவம் வெளிக்கொணர்ந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். வர்த்தக ரீதியில் பெரும் நாய்ப்பண்ணைகளில் ஆயிரக்கணக்கான நாய்கள் சுகாதாரமற்ற நிலையில் இனப்பெருக்கம் செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாய்ப்பிரியர்கள் தாங்கள் வாங்கும் நாய்க்குட்டிகளின் பின்னணியில் இவ்வளவு விடயங்கள் இருப்பது தெரியாமலே அவற்றை வாங்குவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் Kiev விமான நிலையத்தில் கூண்டிலடைக்கப்பட்ட ஏராளம் நாய்க்குட்டிகள் கார் ஒன்றிலிருந்து இறக்கப்படும் CCTV கமெரா காட்சிகள் கிடைத்துள்ளன. சம்பவம் தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.