25 ஆம் திகதி வாக்குமூலம் கொடுக்க இணங்கினார் கோத்தா! – கைது செய்யத் தடை

எதிர்­வரும் 25 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜ­ராகி வாக்கு மூலம் கொடுக்­கவும், அறி­வித்தல் விடுக்­கப்­படும் போது நீதிவான் நீதி­மன்றில் ஆஜ­ரா­கவும் முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தபாய ராஜ­ப­க்ஷ­வுக்கும் சட்டமா அதி­ப­ருக்கும் இடையே இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தாக பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் விராஜ் ஜய­ரத்ன நேற்று மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

அதன்­படி மெத­மு­லன டீ.ஏ. ராஜ­ப­க்ஷ அருங்­காட்­சி­ய­கத்தை அமைக்கும் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் நிதி மோசடி தொடர்பில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ எதிர்­வரும் 25 ஆம் திகதி நிதி குற்றப் புல­னா­ய்வுப் பிரிவில் ஆஜ­ரா­க­வுள்ளார்.

இந்த விவ­காரம் தொடர்பில் தன்னை கைது செய்­வதை தடுக்கக் கோரி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ தாக்கல் செய்த மேன்முறை­யீட்டு மனு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் விராஜ் ஜயரத்ன இதனை மேன்முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்தார். மேன்முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி பிரீத்தி பத்மன் சுர­சேன, அர்­ஜுன ஒபே­சே­கர ஆகியோர் முன்­னி­லையில் இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே மேற்­படி அறி­விக்­கப்பட்­டது.

இதன்­போது பொது சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பாய ராஜ­ப­க் ஷவை கைது செய்­வ­தற்­காக விதிக்­கப்­பட்­டி­ருந்த இடைக்­கால தடை உத்­த­ரவு மேலும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­போது மனு­தாரர் மற்றும் சட்­டமா அதிபர் ஆகிய இரு தரப்­புக்கும் இடையில் எட்­டப்­பட்ட உடன்­பா­டுகள் எழுத்து மூலம் நீதி­மன்­றத்தின் முன்­னி­லையில் முன்­வைக்­கப்பட்­டது. இந் நிலையில் மனு­தா­ர­ரான கோத்த­பாய ராஜ­ப­க்ஷவை எதிர்­வரும் 25ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்குமாறு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கை ஜூலை மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!