போலி பிரசாரங்களால் இனவாதம், மதவாதம் அதிகரிப்பு!

அடிப்படையற்ற அறிவிப்புகள் மற்றும் ஆதாரமற்ற போலியான பிரசாரங்களால் இனவாதம் மற்றும் மதவாதம் அதிகரிப்பதாகவும் கபே அமைப்பின் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலப்பகுதியில் அடிப்படையற்ற அறிவிப்புகள் மற்றும் ஆதாரமற்ற போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்காரணமாக, நிறைய தவறான புரிதல்கள் இடம்பெறுவதாகவும் இந்த தவறான புரிதல்களால் இனவாதம் மற்றும் மதவாதம் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் தேர்தல் மேடைகளில் மற்றும் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வெளிவருவதால் சில வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!