முஸ்லிம்களை தரக்குறைவாக நடத்திய பிரபல வங்கி. கொதித்தெழுந்த முன்னால் அமைச்சர் மனோ கனேசன்.

நேற்று 2ம் திகதி தெஹிவலையில் அமைந்திருக்கும் பிரபல வங்கியான சம்பத் வங்கியின் கிளையில் முஸ்லிம்களை மட்டும் அவமானப்படுத்தப்பட்ட செயல் இடம்பெற்றிருந்தது.

கோவிட்19 காலகட்டத்தில் அரசின் கட்டுபாடுகளுக்காகவும் சுகாதார ஆலோசனைக்காகவும் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, இந்த சந்தர்ப்பத்தில் இந்த கிளைக்கு நிதி நடவடிக்கைகளுக்காக சென்ற ஒரு முஸ்லிம் பெண்ணை முககவசத்தையும் பர்தாவையும் கழற்றிவிட்டு வங்கிஉள்ளே வரவேண்டும் என காவலாளி தெரிவித்ததும் அங்கே சென்றவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிறுந்தது, அவர்கள் அப்படி கழற்ற முடியாது என தெரிவித்ததும் இது எங்கள் வங்கியின் முகாமைத்துவம் அறிவுறுத்தலுக்கு இணங்கவே நாங்கள் செயற்படுகின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த வங்கியாக இருந்தாலும் இன்ங்களுக்கிடையில் இவ்வாறான வேறுபாட்டை ஏற்படுத்த நினைப்பது மகா பெரிய தவறு இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது, இதற்கு அவர்கள் பொறுப்பு கூறவேண்டும் பகிரங்கமாக மண்ணிப்பு கேற்கவேண்டும். இவ்வாறான செயற்பாடு முற்றாக நிறுத்தப்படவேண்டும் இது சகல இனம் மதம் சார்ந்தவர்கள் வாழும் தேசம் என முன்னால் அமைச்சரும் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைப்பேசி சின்னத்தில் 7ம் இலக்கத்தில் போட்டியிடும் மனோ கனேசன் தனது பகிரங்க கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!