நம் நாடு நஷ்ட்டமடைந்துள்ளது – பிரதமர் மகிந்த ராஜபக்ச

கடந்த நல்லாட்சி அரசாங்கம் சிறிய இறப்பர் துண்டு முதல் பிரதான விவசாய பயிர்கள் வரை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்த காரணத்தினால், நாடு நஷ்டமாகி போனதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கேகாலை தெரணியகலை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உரிய நடைமுறையின்றி பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த காரணத்தினால், பெருந்தொகையான பணம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கையின் ரூபாயின் பெறுமதி 132 ஆக இருக்கும் போது அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்தோம். எனினும் நல்லாட்சி அரசாங்கம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயை 200 ரூபாய் என்ற நிலைமைக்கு கொண்டு சென்றது. தவறான பொருளாதார கொள்கைகளே இதற்கு காரணம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களுடன் கூடிய பொருளாதார வேலைத்திட்டங்கள் காரணமாக உலக தொற்று நோய் நிலைமையிலும் இலங்கை ரூபாயின் பெறுமதியை 188 ரூபாவாக பேண முடிந்துள்ளது எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!