இரண்டாக உடைந்து போயுள்ள ஐ. தே கட்சிக்கு வாக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மொட்டு சின்னத்திற்கு வழங்குங்கள் – மஹிந்த

நேற்று 22) மாலை கொழும்பு மாலபே நகரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், மொட்டு கட்சிக்கு தெளிவான வெற்றியை பெற்றுக் கொடுப்பதற்காக பொது மக்களின் ஆதரவு அத்தியாவசியமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரண்டாக உடைந்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக இம்முறை வாக்குகளை மொட்டு சின்னத்திற்கு வழங்கி அரசாங்கத்திற்கு உதவுமாறு பிரதமர் இதன்போது பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் இன்று வரையில் தலைமைத்துவமில்லாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கும் அவ்வாறான ஒரு தலைவிதி ஏற்படும் தினம் மிக தொலைவில் இல்லை.

ரணில் விக்ரமசிங்க கடந்த அரசாங்கத்தில் பிரதமர் பதவியில் இருந்த போதிலும் நாட்டிற்கு வேலை செய்யவில்லை. இந்த இரண்டு தரப்பும் மக்கள் மத்தியில் தோல்வியடைந்த இரண்டு தரப்புகளாகும். இன்று வரையில் மொட்டு கட்சியின் வெற்றி தௌிவாகியுள்ளது.

அந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக்குவதற்கு மூன்றில் இரண்டு அதிகாரத்தை பெற்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அனைவரினதும் ஆதரவினை பெற்றுத் தருமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!