ஐக்கிய அமீரகத்தில் நள்ளிரவில் பெற்றோருக்கு வந்த அலைபேசி அழைப்பு: காத்திருந்த அதிர்ச்சி!

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் மாணவி ஒருவர் நள்ளிரவில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகிதியை சேர்ந்த பினு பால் மற்றும் மேரி தம்பதியின் மகள் 15 வயதான சமீக்‌ஷா பால் என்பவரே தற்கொலை செய்து கொண்டவர். ஷார்ஜா மாகாணத்தில் அல் தாவூன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில், தாங்கள் வசிக்கும் மூன்றாவது மாடியில் இருந்தே சிறுமி சமீக்‌ஷா குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பினு பால் தம்பதியின் இரட்டையர்களில் ஒருவரான சமீக்‌ஷா தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நள்ளிரவு 2.35 மணிக்கு நடந்த இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் பெற்றோரை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் தூக்கத்தில் இருந்துள்ளனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி சிறுமி சமீக்‌ஷா மரணமடைந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து சடலம் தடயவியல் ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டது. பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சமீக்‌ஷா அடுத்து பத்தாம் வகுப்புக்கு செல்ல உள்ளார். அவருக்கு எவ்வித மன அழுத்தமும் இல்லை எனவும், வழக்கமாக தூங்கச் சென்றதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அபுதாபி மாகாணத்தில் குடியிருந்த இந்த பினு பால் குடும்பம், பணி நிமித்தம் சமீபத்தில் ஷார்ஜா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ளனர். உரிய நடவடிக்கைகளுக்கு பின்னர் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு நடத்த முடிவு செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுவரை நடந்த விபத்துகள்:

2020 மார்ச் 11 அன்று, அபு ஷகராவில் 11 வது மாடியில் உள்ள தங்களது குடியிருப்பின் திறந்த ஜன்னல் வழியாக ஆட்டிசம் பாதித்த ஆறு வயது குழந்தை தவறி விழுந்து இறந்தது.

2019 டிசம்பர் 12, அல் மஜாஸ் 2 இல் உள்ள எட்டாவது மாடி குடியிருப்பில் இருந்து இரண்டு வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார்.

2019 டிசம்பர் 11, துபாயின் அல் நஹ்தாவில் 9-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து ஐந்து வயது சிறுமி இறந்தார்.

2019 அக்டோபர் 27, ஷேக் சயீத் சாலையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது 16 வயது சிறுமி உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்தார்.

2019 ஜனவரி 14, புஜைராவின் டிப்பாவில் உள்ள ஒரு குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த 6 வயது குழந்தை காயம் அடைந்தது.

2018 டிசம்பர் 8, ஷார்ஜாவில் உள்ள தனது ஐந்தாவது மாடி குடியிருப்பில் இருந்து ஏழு வயது தவறி விழுந்து உயிரிழந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!