முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் சந்திரிகா குமரதுங்க உத்தியோகபூா்வ வாகனங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்தார்

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார் உட்பட 4 உத்தியோகபூா்வ வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் சந்திரிகா குமரதுங்க மீள ஒப்படைத்துள்ளார்.

அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கவும், நாட்டின் நிதி சிக்கல்களை சமாளிக்க ஏதுவாகவும் இந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தரவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

அரசினால் சந்திரிகாவுக்கு 12 உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 09 அவரது தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காகவும், 03 பாதுகாப்புப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சந்திரிகா குமாரதுங்க சுட்டிக்காட்டினார்.

மீள ஒப்படைக்கப்பட்ட வாகனங்களில் நிஸான் ஜீப், மகேந்திர டபுள் கப் மற்றும் டொயோட்டா லாண்ட் குரூசர் ஆகியவையும் அடங்குகின்றன.

அடுத்து தனக்கு அரசால் வழங்கப்பட்ட மேலும் 08 வாகனங்களையும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!