சர்வதேச சக்திகளுக்கு நன்றிக் கடன் செலுத்தவே இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கிறது அரசாங்கம்! – மஹிந்த குற்றச்சாட்டு

தேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­ வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு ­வ­ரப்­ப­ட­வுள்ள குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பி­லான பரஸ்­பர ஒத்­து­ழைப்பை வழங்கும் சட்ட திருத்தம் குறித்து அவர் விடுத்­துள்ள விசேட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

‘தற்­போ­தைய கூட்­டணி அர­சாங்கம் குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பி­லான பரஸ்­பர ஒத்­து­ழைப்பை வழங்கும் சட்­டத்தை திருத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் அறிய முடிந்­துள்­ளது.

2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பாக பரஸ்­பர ஒத்­து­ழைப்பு வழங்கும் சட்­டத்தை திருத்­து­வ­தற்­காக சட்­ட­மூல நகல் பத்­தி­ர­மொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே தேசிய அர­சாங்கம் தம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வந்த அனைத்து சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கும் நன்­றிக்­கடன் செலுத்­தவே எமது இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்கும் நகர்வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதன் ஒரு கட்­ட­மாக குற்­ற­வியல் விட­யங்கள் தொடர்­பி­லான பரஸ்­பர ஒத்­து­ழைப்பை வழங்கும் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொண்டு சர்­வ­தேச தலை­யீ­டு­களை பலப்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!