பாலஸ்தீனியாவில் கொண்டாட்டத்தின்போது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்: ஸ்கேன் செய்த போது அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

திடீரென தனக்கு தூக்கம் வருவது போல் உணர்வதாக கூறிய சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவனுக்கு ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த ஒன்பது வயது பாலஸ்தீனிய சிறுவனின் தலையில் எடுக்கப்பட்ட ஸ்கேனில், அவனது மூளையில் துப்பாக்கிக்குண்டு ஒன்று பதிந்திருந்தது. அதன் பிறகு அவனது தலையை பரிசோதித்தபோது, ஒரு சிறு காயம் இருப்பதைக் கவனித்துள்ளார்கள் மருத்துவர்கள்.

கொண்டாட்டங்களின்போது துப்பாக்கியால் சுடும்வழக்கம் சில நாடுகளில் இருப்பதால், அப்படி சுடும்போது அவன் தலையில் குண்டு பாய்ந்திருக்கலாம் என கருதும் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். குண்டு மூளையில் பாய்ந்த நிலையிலும், அந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போது சுயநினைவுடனேயே இருந்துள்ளான்.

அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அந்த குண்டை அகற்றிய நிலையில், தற்போது அந்த சிறுவன் நன்றாக இருக்கிறான். இதே குண்டு வேறொரு கோணத்தில் தலையில் பாய்ந்திருந்தால், மூளைக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கும், பல நரம்பு மண்டல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என்று கூறும் மருத்துவர்கள், அந்த சிறுவன் பிழைத்தது அதிர்ஷ்டம்தான் என்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!