யாழ்ப்பாணத்தில் சிறிதரன், சுமந்திரன், சித்தார்த்தன் வெற்றி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் தொடர்பாக நள்ளிரவுக்குப் பின்னரும் குழப்ப நிலை காணப்பட்டது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் தேர்தல் முடிவை அறிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியில், சிவஞானம் சிறிதரன் 35,884 வாக்குகளைப் பெற்றுள்ளார்.இதையடுத்து, எம்.ஏ.சுமந்திரனுக்கு 27,834 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.

சித்தார்த்தன் 23,840 விருப்பு வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ளார்.

சசிகலா 23,098 விருப்பு வாக்குகளையும், ஈ.சரவணபவன் 20,358 வாக்குகளையும், மாவை சேனாதிராஜா 20,292 வாக்குகளையும், பா.கஜதீபன் 19,058 வாக்குகளையும், ஆர்னோல்ட் 15,386 வாக்குளையும் கு.சுரேந்திரன் 10,917 வாக்குளையும், வே.தபேந்திரன் 5,952 வாக்குளையும் பெற்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!