லெபனான் வெடிவிபத்துக்கு காரணமான அறை எண் 12: உயிரை பணயம் வைத்து போராடிய தீயணைப்பு வீரர்களின் இறுதி நிமிடங்கள்!

பெய்ரூட்டின் பேரழிவுக்கு காரணமானதாக கூறப்படும் அறை எண் 12-ன் உள்ளே நுழைந்து விபத்தை தவிர்ப்பதற்காக சில தீயணைப்பு வீரர்கள் போராடும் இறுதி தருணத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தின் காரணமாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த தேசத்தை உலுக்கிய இந்த சம்பவத்தால், துறைமுகத்தைச் சேர்ந்த 16 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 18 பேர் விசாரணையின் வளையத்தின் உள்ளதாக இராணுவ நீதிபதி ஒருவர் உறுபடுத்தினார்.

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தவர்களுக்கும் நீதி கோரி லெபனான் தலைநகரில் வசிப்பவர்கள் ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பேரழிவிற்கு முக்கிய காரணம் அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோன் தான் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அம்மோனியம் நைட்ரேட் துறைமுகத்தின் அறை எண் 12-ல் வைக்கப்பட்டுள்ளது.

உள்ளே வைக்கப்பட்டிருந்த சுமார் 2750 டன் அம்மோனிய நைட்ரேட் வெடித்து சிதறியதால், இவ்வளவு பெரிய மிகப் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அறைக்குள் செல்வதற்காக வெடி விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக கதவின் பூட்டை திறக்க முயற்சிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், இராயனங்களுக்கான எச்சரிக்கை குறிகளும் அதன் கதவில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை அங்கிருக்கும் நபர் ஒருவர் தன்னுடைய தொலைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த நபரும் இந்த வெடி விபத்தில் இறந்துவிட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் குண்டுவெடிப்புக்குப் பின்னர் 10 தீயணைப்பு வீரர்களைக் காணவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இருந்த Sahar Faris என்ற 25 வயது இளம் பெண் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு அடுத்த ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் இவர் உயிரிழந்ததால், அவரின் வருங்கால கணவனாக வேண்டிய Gilbert Karaan அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், என் இதயம் சுக்கு நூறாக உடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

முதலில் அறை எண் 9-ல் தீ விபத்து ஏற்பட்டதால், அதை சமாளிப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அழைக்கப்பட்டுள்ளனர். அது அப்படியே கொஞ்சம், கொஞ்சமாக அடுத்தடுத்து அம்மோனிய நைட்ரேட் இருந்த பகுதியில் பரவியதால், ஒரு சிறிய அணு குண்டுக்கு சமமான மிகப் பெரிய, பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!