145 ஆசனங்களுடன் மொட்டு அசுர வெற்றி! – சுருண்டது ஐதேக

பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, திருகோணமலை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களையும் கைப்பற்றி சிறிலங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

பொதுஜன பெரமுன 6,853,690 வாக்குகளைப் பெற்று, மொத்தம் 145 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. பொதுஜன பெரமுன செல்லுபடியான மொத்த வாக்குகளில், 59.09 வீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி, 2,771,98 வாக்குகளைப் பெற்று 52 ஆசனங்களுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 23.90வீதமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 445,958 வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 327,168 வாக்குகளுடன், 10 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி ஐந்தாமிடத்தைப் பெற்று, படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 249,435 வாக்குகள் மாத்திரம் ஐதேகவுக்கு கிடைத்திருக்கின்றன. எனினும் ஐதேகவுக்கு தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 67,766 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, 67,692 வாக்குகளுடன், 1 ஆசனத்தைப் பெற்றிருக்கிறது.

67,758 வாக்குகளைப் பெற்ற எமது சக்தி எமது மக்கள் கட்சி ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை மாத்திரம் பெற்றிருக்கிறது,

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, 66,579 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும், ஈபிடிபி 61,464 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், கைப்பற்றியுள்ளன.

மேலும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, 55,981 வாக்குகளுடன், ஒரு ஆசனத்தையும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 51,301 வாக்குகளுடன், ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43,319 வாக்குகளுடன் 1 ஆசனத்தையும், தேசிய காங்கிரஸ், 39,272 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!