சர்வாதிகாரியாக உருவெடுக்கும் சீனா அதிபர்: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

ஜேர்மனியை சர்வாதிகாரியாக ஆண்டு வந்த ஹிட்லரின் பாதையை, சீனா அதிபர் ஜி ஜிங்பிங் அப்பியே பின்பற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி மட்டுமின்றில் உலகின் பல்வேறு நாடுகளை ஆட்டிப்படைத்தவர் ஹிட்லர். சர்வாதிகாரியாக வலம் வந்த இவரைப் போன்றே சீனா அதிபர் ஜி ஜிங்பிங் சர்வாதிகாரியாக உருவெடுக்க துவங்கியுள்ளார். ஹிட்லரின் அதே அரசியல் திட்டங்களையும், சட்டங்களையும் சீன அதிபர் ஜிங்பிங் அப்படியே பின்பற்றுகிறார். கொஞ்சம் கூட எந்த வித ஒரு மாற்றம் இல்லாமல் அப்படியே பின்பற்றி வருகிறார்.

இருவரும் அரசியலுக்கு வந்ததும், மக்களை கவர்ந்ததும், ராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும், பிற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தியதும் அப்படியே ஒரே மாதிரி இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 20-ஆம் நூற்றாண்டில் ஜேர்மனியில் இவர் நடத்திய சர்வாதிகார ஆட்சி, யூதர்கள் மீதான தாக்குதல் எல்லாம் இரண்டாம் உலகப்போருக்கு காரணமாக மாறியது. உலகப்போருக்கு காரணமாக இருந்த அதே ஹிட்லருக்கும் சீனாவின் அதிபர் ஜிங்பிங்கிற்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது.

இரண்டு பேரின் அரசியல் பயணமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே தான் உள்ளது. 1929-1932 ஏற்பட்ட மாபெரும் பொருளாதர வீழ்ச்சி காரணமாக ஜேர்மனி பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்தது. மக்கள் வீதிக்கு வந்தனர். வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. வறுமை வாட்டியது. இந்த வறுமைக்கு எல்லாம் காரணம் யூதர்கள் தான் என்று பிரச்சாரம் செய்த ஹிட்லர், அதே யூத எதிர்ப்பு மூலம் ஆட்சிக்கும் வந்தார். பொருளாதார சரிவில் இருந்து உங்களை மீட்கிறேன், யூதர்களிடம் இருந்து உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன் என்ற உத்தரவாதத்துடன் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்.

ஜிங்பிங் ஆட்சிக்கு வந்ததும் இப்படித்தான். 2007-2009 உலகம் முழுக்க பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா என்று எல்லா நாடுகளும் பெரும் சரிவை சந்தித்தது. சீனாவின் மோசமான பொருளாதார சரிவு காரணமாக அங்கு நிறுவனங்கள் எல்லாம் மூடப்படும் நிலைக்கு சென்றது. இந்த பொருளாதார சரிவை மீட்டு கொண்டு வருவேன் எந்த சத்தியதுடன் ஹிட்லர் போலவே ஜிங்பிங்கும் சீனாவில் ஆட்சியை பிடித்தார். ஹிட்லர் ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் தனக்கு இருந்த அரசியல் எதிரிகளை கைது செய்தார் அல்லது கொலை செய்ய உத்தரவிட்டார்.

அதேபோல்தான் 2014-2017 வரை சீனாவில் தனக்கு எதிராக இருந்த அரசியல் தலைவர்கள் எல்லோரையும் ஜிங்பிங் கைது செய்து சிறையில் அடைத்தார். 1933-1934 ஆண்டுகளில் தனது நாட்டில் இருக்கும் பொலிஸ், இராணுவம் என்று அனைத்து துறைகளையும் ஹிட்லர் தனது நேரடி கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். 2014-2019-ல் சீனாவின் அனைத்து படைகளையும் ஹிட்லர் போலவே ஜிங்பிங் தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். 1934-1935-ல் ஜேர்மனியில் அனைத்து அதிகார மையங்களை தனக்கு கீழ் ஹிட்லர் கொண்டு வந்தார். இராணுவ தளபதி, பிரதமர் , அதிபர் எல்லாம் நான் தான் என்று ஹிட்லர் அறிவித்தார்.

அதே போன்று சீனாவிலும் 2014-2018-ல் சீனாவின் அனைத்து உச்சபட்ச அதிகாரங்களையும் ஜிங்பிங் தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். நாட்டின் ஒரே தலைவர் நான் தான் என்று ஜிங்பிங் அறிவித்தார். 1935-ல், ஜெர்மனியின் ஒரே தலைவர் நான்தான் எல்லோரும் எனக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும் என்று ஹிட்லர் அறிவித்தார். இதற்கா hail hitlar வாசகம் உருவாக்கப்பட்டது. அதேபோல் 2017 ஜிங்பிங் சீனாவின் மையம் நான்தான் என்று அறிவித்தார். இரண்டு நாடுகளிலும் ஊடங்கங்கள் இரண்டு நாட்டு அதிபர் மூலமும் நேரடியாக கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது.

போருக்கு ஏற்றபடி 1933-ல் இருந்தே ஜேர்மனியின் அனைத்து படைகளையும் ஹிட்லர் தயார்படுத்தி வந்தார். ஜெர்மனியின் விமானப்படை பலம் பிரித்தானிய விமானப்படை பலத்தை முந்தியது. இதேபோல் ஜிங்பிங் 2013-ல் இருந்தே போருக்கு தயார் ஆகும் வகையில் படைகளை பலப்படுத்தி வருகிறார். சீனாவின் கடற்படை அமெரிக்காவின் கடற்படை பலத்தை ஏற்கனவே முந்திவிட்டது. இரண்டு நாட்டு படைகளின் பலமும் ஒரே மாதிரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 1935-ல் ஹிட்லர் தனது படையை சார்லாண்ட், ரைன்லாண்ட் ஆகிய சுதந்திர பகுதிகளுக்கு அனுப்பி ஆக்கிரமிப்பை செய்தார்.

அதேபோல் 2015 ஜிங்பிங் தனது பிஎல்ஏ படைகளை ஸ்பார்ட்டலி தீவிற்கு அனுப்பு அந்த பகுதியை முறைகேடாக கைப்பற்றினார். 2020ல் ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டத்தை ஜிங்பிங் கொண்டு வந்தார். 1938-ல் ஆஸ்திரியாவை ஜேர்மன் உடன் இணைத்தார் ஹிட்லர். அதேபோல் கொஞ்சமும் மாற்றமின்றி 2019-ல் தைவானை சீனாவுடன் இணைப்பதாக ஜிங்பிங் அறிவித்தார். அதேபோல் 1938-1939 வரை அண்டை நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமிக்க தொடங்கினார். அந்த நிலம் வரலாற்று ரீதியாக எங்களுக்கு சொந்தமானது என்று கூறி, அண்டை நாட்டு நிலங்களை ஆக்கிரமிக்க தொடங்கினார்.

2019-2020ல் அதேபோல் பூடான், இந்தியா, நேபாளம், வங்கதேசம் என்று பல நாடுகளின் இடங்களை சீனாவின் படைகள் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. ஹிட்லர் போல ஜிங்பிங்பிங்கும் நில ஆக்கிரமிப்பில் இறங்கி உள்ளார். இப்ப்படி ஹிட்லரின் பாதையை சீன அதிபரி தெரிந்தோ, தெரியாமலோ அப்படியே பின்பற்றி வருகிறார். இப்போது பரவும் கொரோனா வைரஸிற்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இது ஒரு உயிரியல் போர் என்று சில நாடுகள் கூறுகின்றன. அனைத்தையும் தன் கட்டுப்பட்டில் வைக்க சீனா முயல்வதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் மீண்டும் ஒரு சர்வாதிகாரி முளைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, சீனாவின் ஆட்டத்தை உலகின் பல்வேறு நாடுகள் அடக்கி வருகின்றன, அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன. மேலும், இரண்டு தலைவர்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் அனைத்தும் StratNewsGlobal என்ற யூடியூப் பக்கம் மூலம் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை நீக்கும்படி இந்தியாவில் இருக்கும் சீன தூதரகம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!