அரசியலமைப்பு திருத்தங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்-அனுரகுமார திஸாநாயக்க

அரசாங்கம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் எந்த ஷரத்தில் திருத்தங்களை செய்ய போகிறது என்பதை தெளிவாக நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் எந்த ஷரத்தை திருத்த போகிறோம் என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எனினும் அரசாங்கம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் மற்றும் ராஜாங்க அமைச்சுகள் என்ற வரையறையை நீக்குவது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது எந்த வகையிலும் மக்களுக்காக செய்ய போகும் திருத்தம் அல்ல. அது ஆட்சியாளர்களின் தேவைக்கு அமைய அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்வதற்கான திருத்தமாகவே இருக்கும்.

நாட்டில் கொண்டு வரப்பட்ட இரண்டு அரசியலமைப்புத் திருத்தச்சட்டங்களை தவிர ஏனைய அனைத்து திருத்தச் சட்டங்களும் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் தேவைக்கு அமைய கொண்டு வரப்பட்டவை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்யும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என புதிய நீதியமைச்சர் அலி சப்றி அண்மையில் தெரிவித்திருந்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!