இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பகுதியில் இன்று அதிகாலை இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதனால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 5.23 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. அடுத்த 6-வது நிமிடத்தில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.9 ஆகவும் பதிவாகி இருந்தது.

முதலாவது நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 22 கி.மீ ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 26 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டது. எனினும் இந்த இரு நிலநடுக்கங்களின் பின்னர், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும், மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!