பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க தவறியோர் அரசை விமர்சிக்கின்றனர் – தினேஸ்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு உரிய வகையில் நியமனங்கள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்பொழுது மேற்கொண்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குண வர்தன தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத தரப்பினர் தற்பொழுது அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை விமர்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தெளிவில்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில அளிக்கையிலேயே அமைச்சர் தினேஸ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

நியமனங்களுக்கு தெரிவாகாத பட்டதாரிகள் அது குறித்து மேன்முறையீடு செய்ய முடியும். இதற்கான நடவடிக்கையை தற்பொழுது அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பட்டதாரிகள் எவருக்கும் பாதிப்பு எற்படாத வகையிலேயே தனது திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!