13 பற்றி பேச இந்திய தூதுவருக்கு அதிகாரம் இல்லை!

இலங்கையின் உள்ளீட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை இந்தியாவிற்கு கிடையாது என்றும், 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியத் தூதுவர் வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்றும் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

” இலங்கைப் பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவிக்க இந்திய தூதுவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இலங்கை, இந்தியாவின் உறவைப் பலப்படுத்துவது மட்டுமே அவரது பணி. அதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுவரிடம் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேசுமாறு கூறிய போது அவர் அதை நிராகரித்திருக்கலாம்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக போராடுகிறோம் என்று மார்தட்டும் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை, ஆகவே அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் பணியை முன்னெடுக்க அவர்களை நான் நினைவு படுத்துகிறேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!