நாணயச் சுழற்சி மூலம் எம்.பி தெரிவு!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்காக, நாணயச் சுழற்சி மேற்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர பதவி இழக்கப்படுவாராயின் அல்லது தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, மரண தண்டனைக்கு எதிரான தீர்ப்பின் மேன்முறையீட்டின் தீர்ப்பில் குற்றவாளி என நிரூபிக்கப்படுமாயின், அவர் பதவி இழப்பார்.

பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதால் உருவாகும் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, பாராளுமன்றத் தேர்தலில் அடுத்த இடத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் நியமிக்கப்படுவார்.

ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 08 எம்.பிக்கள் தெரிவானதோடு, அதில் 2ஆம் இடத்தில் 104,237 பிரேமலால் ஜயசேகர பெற்றிருந்தார். விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த அதிகூடிய வாக்குகளை பெற்ற இரு வேட்பாளர்களும் ஒரே எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றிருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ரஞ்சித் பண்டார மற்றும் சன்னி ரோஹண கொடித்துவக்கு ஆகிய இருவரும் 53,261 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில், அவ்வாறான நிலையில், குறித்த நபரை தெரிவு செய்ய நாணயச் சுழற்சிசே மேற்கொள்ளப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதில், இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான தெரிவத்தாட்சி அதிகாரியினால் குறித்த நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்பட்டு, வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் எனவம் அவர் சுட்டிக்காட்டினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!