உளுந்து இறக்குமதி தடையை மறுபரிசீலனை செய்ய பிதரதமர் பணிப்பு!

உளுந்து இறக்குமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் உளுந்து முக்கியத்துவம் பெறுவதனால், உளுந்து மீதான இறக்குமதி தடையை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதமர், ஜனாதிபதி செயலாளருக்கு இன்று (18) காலை இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!