கஜேந்திரகுமாருக்கு உரிமை மறுப்பு! – சபையில் சுமந்திரன் கண்டனம்.

திலீபன் நினைவேந்தல் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் கொண்டு வந்த விசேட கூற்றுக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று அனுமதி வழங்க மறுத்துள்ளதற்கு, நாடாளுமனற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நானும் பொது அலுவல்கள் குழுவின் உறுப்பினராக இருக்கிறேன். கட்சித் தலைவர்கள் மக்கள் சார் விடயங்களை சபையில் கேட்பதில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிப்பதற்கு அந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில், தனிக் கட்சி ஒன்றின் ஒரே உறுப்பினராக இருந்த டக்ளஸ் தேவானந்தா ஒவ்வொரு நாளும் 27/2 விதியின் இன் கீழ் கேள்வி எழுப்பினார். அப்போது எவரும் தடை விதிக்கவில்லை.

அதுபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த கூற்று எந்தவொரு நீதிமன்ற விசாரணையிலும் இருக்கும் விடயம் இல்லை. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு விடயம் தொடர்புடையது. சபாநாயகரே, நீங்கள் தவறான முறையில் சபையை வழிநடத்துகிறீர்கள்.

சபையை உடனடியாக ஒத்திவைத்து இந்த விடயத்தைத் தீர்க்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்றும், சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!