போதிய வளங்கள் இல்லாததால் இலங்கையை நிர்ப்பந்திக்க முடியவில்லை! – ஐ.நா பொதுச்செயலர்

போதுமான வளங்கள் இல்லாத காரணத்தினாலேயே பொறுப்பு கூறல் பொறிமுறையை விடயத்தில் இலங்கை அரசை ஐ.நா. வினால் நிர்பந்திக்க முடியாமல் இருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார். ஒஸ்லோ நகரில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் ஐ.நா. ஏன் தோல்வியை சந்திக்கவேண்டி ஏற்பட்டது. இலங்கை விடயத்தில் ஏன் இதுவரை சரியான பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஐ.நா. செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

‘நாடுகளுக்கு பொறுப்புக்கள் இருக்கின்றன. சர்வதேச சட்டங்களை ஏற்று கடைபிடிக்க வேண்டிய பொறுப்புக்கள் அவற்றுக்கு இருக்கின்றன. ஆனால் அதனை இலங்கை செய்யவில்லை. வளப்பற்றாக்குறைகள் காரணமாக ஐ.நா.வினாலும் அதனை சரியான முறையில் செய்ய முடியவில்லை. இந்த விடயம் பற்றி நங்கள் ஆராய்ந்து எங்களது அணுகுமுறைகளை மாற்றி வருகிறோம். இன அழிப்பு, யுத்த குற்றங்கள், மனிதத்திற்கு ஏதிரான குற்றங்கள் போன்றனவற்றிக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!