சுவிஸில் பெற்ற தாயை கொல்ல காதலனை ஏவிய மகள்: அரங்கேறிய கொடூர சம்பவம்!

சுவிட்சர்லாந்தில் பணத் தேவைக்காக காதலனை ஏவி சொந்த தாயாரை கொலை செய்த வழக்கில் பெண்மணி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். திங்களன்று வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில், தாயாரை கொலை செய்ய தூண்டிய மகள் விடுவிக்கப்பட்டதுடன், கொலை செய்த அவரது காதலனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சூரிச் மண்டலத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தற்போது 47 வயதான பெண்மணி ஒருவர் தமது காதலனின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, சொந்த தாயாரையை கொல்ல திட்டமிட்டுள்ளார். இதனால் தமக்கு கிடைக்கும் சொத்தில் இருந்து காதலனுக்கு தேவையான 300,000 பிராங்குகள் தொகையை அளிக்கவும் முடிவு செய்தார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடி ஆகஸ்டு 2016-ல் மருத்துவரான அந்த 70 வயது பெண்மணி கொல்லப்படுகிறார்.

மூச்சுத்திணறடித்து கொலை செய்துவிட்டு, தற்போது 31 வயதாகும் சுவிஸ்-கொலம்பிய நாட்டவரான அந்த நபர் மருத்துவரின் குடியிருப்பில் இருந்து பணம், நகை உள்ளிட்டவையை கொள்ளையிட்டு சென்றுள்ளார். தற்போது இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தாயாரை கொலை செய்ய தூண்டியதாக உறுதியாக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் சுவிஸ் பெண்மணியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டுமின்றி இதுவரை அவர் விசாரணை கைதியாக சிறையில் இருந்துள்ளதால், இழப்பீடாக அவருக்கு 200,000 பிராங்குகள் வழங்கவும் உத்தரவாகியுள்ளது. கொலை மற்றும் கொள்ளைக்கு பின்னர் கொலம்பியாவுக்கு சென்றுவிட்ட தற்போது 31 வயதாகும் அந்த நபருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மட்டுமின்றி, இவர் தான் கொலை செய்தார் என்பதை விசாரணை அதிகாரிகளால் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், டி.என்.ஏ சோதனையில் அந்த நபர் சிக்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!