எண்ணெய்க் கப்பலை வெளியேற்ற அனுமதி மறுப்பு!

கடல் மாசுபாடு குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரே நியூ டைமன்ட் கப்பலை வெளியேற அனுமதி வழங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சூழல் பாதுகாப்பு அதிகார சபை சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.

தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக் கோரல் பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!