பிரித்தானியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில் ரயிலில் பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்: அச்சத்தில் மக்கள்!

பிரித்தானியாவில் எஸ்.என்.பி நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர் கொரோனா பாதிப்புடன் லண்டனுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இருமுறை ரயில் பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தே அவர் ரியில் பயணம் மேற்கொண்டுள்ளதால், பதவியை துறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளார்.

மட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்று தொடர்பில் திங்களன்று முன்னெடுக்கப்பட்ட நாடாளுமன்ற விவாதத்திலும் தாம் கொரோனா பாதிப்புடன் கலந்து கொண்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர் தமது தவறை ஒப்புக்கொண்டதன் பின்னர் SNP இலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை, ஸ்டான்லி ஜான்சன் ஒரு கடையில் மாஸ்க் அணியத் தவறிய புகைப்படம் ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியரின் ஒப்புதலும் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!