இது சில்லறை பிரச்சினையா? -சாள்ஸ் ஆவேசம்

வடக்கின் 6600 குடும்பங்ககளுக்கான பிரச்சினை உங்களுக்கு சில்லறைத்தனமான பிரச்சினையா என சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி சபாநாயகரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமரிடம் கேள்வி கேட்கும் வேளைகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை கேளுங்கள், மாறாக சில்லறைத்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை பார்த்து சபாநாயகர் தெரிவித்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்ற பிரதமரிடம் கேள்வி நேரத்தில் வடக்கின் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் எம்.பி கேள்வி எழுப்பினார்.

இதன்போது சில கேள்விகளுக்கு பிரதமர் பதில் தெரிவிக்காது மழுப்பிய வேளையில் இடை நடுவே குறுக்கிட்ட சபாநாயகர், ” பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பும் வேளையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை கேளுங்கள், சில்லறைத்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம், எனவே சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி இனிமேல் இதனை கருத்தில் கொள்ளுங்கள்” என்றார்

இதன்போது சபாநாயகரின் கருத்தை எதிர்த்த சார்ள்ஸ் எம்.பி ” வடக்கின் 6600 குடும்பங்களின் வீட்டுப்பிரச்சினை உங்களுக்கு சில்லறைத்தனமானதாகவா உள்ளது. இது ஆறாயிரம் குடும்பங்கள் சார்ந்த பிரச்சினை, இது சில்லறைத்தனமான பிரச்சினை இல்லை’ எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!