வடக்கில் வீதி புனரமைப்பு குறித்து ஆராய வருகிறது இந்திய நிபுணர் குழு

வடக்கு மாகாணத்தின் வீதி புனரமைப்பு தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசின் நிபுணர் குழுவொன்று விரைவில் சிறிலங்கா வரவுள்ளது.

சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் மற்றும் நீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய வாய்மூல கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.

வடக்கில் மறுசீரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக இந்திய நிபுணர்களின் குழு விரைவில் வரவுள்ளது.

இந்தச் செயற்பாட்டில் பங்கெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

முல்லைத்தீவையும், திருகோணமலையையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!