தந்தை கூறியது போல் கிளியில் 28 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் – ஜீவன்

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், மேல் மாகாணத்துக்கு மட்டுமல்ல கிளிநொச்சியிலும் நிறைய சேவை செய்ய விரும்பினார். அவர் செய்ய நினைத்ததை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமென நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று அவரது மகனும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,

“எனவே தான் இங்கு 35 மில்லியனை ஒதுக்கியுள்ளோம். இங்கே 28 ஆயிரம் வீடுகளை கட்டுவதாக ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருந்தார். அதையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.

என்னை பொறுத்தவரை நான் சொன்னதைச் செய்வேன். உங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கட்டாயம் செய்வோம்.

நான் தமிழ் பேசும் அமைச்சர், அதிலும் இளமையான அமைச்சராக இருக்கிறேன். நான் மலையகத்துக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேவை செய்யவே வந்துள்ளேன்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!