ரஷியாவில் 29 கல்லறைகளிலிருந்து இளம்பெண்களின் சடலங்களை திருடி நபர் செய்த செயல்!

கல்லறைகளைக் குறித்து நன்கு கற்ற வரலாற்றாளர் ஒருவர் வீட்டில் 29 பொம்மைகள் கிடைத்தன. அவை பொம்மைகள் மட்டுமே என அவரது பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவை பொம்மைகள் அல்ல என்ற உண்மை தெரியவந்தது. அந்த 29 பொம்மைகளும், 29 கல்லறைகளிலிருந்து திருடப்பட்ட இளம்பெண்களின் உடல்கள் என தெரியவந்தபோது Anatoly Moskvin (53) என்ற அந்த கல்வியாளரின் பெற்றோர் அதிர்சியடைந்தார்கள்.

கல்லறைகள் குறித்து கற்ற நிபுணரான Moskvin, இளம்பெண்களின் கல்லறைகளைத் தோண்டி, அவற்றிலிருக்கும் பெண்களின் உடல்களை வீட்டுக்கு கொண்டுவந்து, அவற்றிற்கு நன்றாக உடை உடுத்தி, மேக் அப் போட்டு தன் படுக்கையறையில் சேமித்து வைத்திருக்கிறார்.

அவை, பதப்படுத்தப்பட்ட உடல்கள் என்பது தெரியவந்த நிலையில் கைது செய்யப்பட்ட Moskvin, மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலை நாடுகளில் கல்லறைகளை சேதப்படுத்துவதும், இறந்தவர்களின் உடல்களைக் கையாளுவதும் குற்றம் என்பதால் Moskvin கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், தான் திருடிய இளம்பெண்களின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோரச் சொன்னபோது மறுத்த Moskvin, கல்லறையில் புதைத்ததோடு அவர்களது வேலை முடிந்துவிட்டது.

அவர்கள் தங்கள் பிள்ளைகளை குளிரில் தவிக்க விட்டிருந்தார்கள், அவர்களை நான் எடுத்து பத்திரமாக வெதுவெதுப்பாக என் அறையில் வைத்திருக்கிறேன் என்று கூறி மன்னிப்புக் கேட்க மறுத்துள்ளார் Moskvin.

அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாய், Moskvinஐ நிரந்தரமாக மன நோய் மருத்துவமனையிலேயே அடைத்துவைக்கவேண்டும் என்று கோரியுள்ளதோடு, தன் மகளின் உடலை வேறொரு கல்லறையில் அடக்கம் செய்து, அதில் தன் மகளின் பெயரை எழுதாமலே வைத்துள்ளாராம்.

Moskvin சிறையிலிருந்து வந்தால் தன் மகள் உடலை மீண்டும் திருடிவிடக்கூடாது என்பதற்காக அந்த பெண் அப்படி செய்துள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!